×

வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலைகளில் தீயணைப்பு அலுவலர்கள் ஆய்வு

ஏழாயிரம்பண்ணை ஏப்.19: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள அச்சங்குளதம், மடத்துப்பட்டி, கணஞ்சாம்பட்டி, சிவசங்குபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடி விபத்துகளில் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். தொடர் வெடி விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழ்நாடு அரசிடம் இது குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தியது. இதனை தொடர்ந்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய தீயணைப்பு மீட்பு பணி தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் தலைமையில் 10 குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டது.அதன் அடிப்படையில் விருதுநகர், தேனி, சிவகாசி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் தலைமையில் ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் நேற்று முன்தினம் சிவகாசி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். 2ம் நாளாக நேற்று வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆலைகளில் ஆய்வு செய்த பின்னர் அதன் அறிக்கைகளை தமிழக அரசிடம் அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளனர்.

The post வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலைகளில் தீயணைப்பு அலுவலர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vembakota ,Ejayarampannai ,Vembakottai ,Virudhunagar district ,Acchangulatham ,Mathuthupatti ,Gananjampatti ,Sivasangupatti ,Dinakaran ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு